Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 59:2 — வெளியேற்றம்

அவர்தான், வேதத்தையுடைய மக்களுக்கிடையில் நம்பமறுத்தவர்களை அவர்களுடைய இல்லங் களிலிருந்து ஒரு பெரிய எண்ணிக்கையிலான வெளியேற்றமாக வெளியேற்றியவர். அவர்கள் வெளியேறிச் சென்று விடுவார்கள் என்று நீங்கள் ஒரு போதும் நினைக்கவில்லை, மேலும் அவர்கள் தங்களுடைய ஏற்பாடுகள் கடவுள்- இடமிருந்து தங்களைக் காப்பாற்றி விடுமென்று அவர்கள் நினைத்தனர். ஆனால் பின்னர் கடவுள் அவர்கள் ஒருபோதும் எதிர்பாராத புறத்திலிருந்து அவர்களிடம் வந்தார், மேலும் அவர்களுடைய இதயங்களுக்குள் திகிலை எறிந்தார். இவ்விதமாக, அவர்கள் தங்கள் சுயமான முடிவின் படியே, கூடுதலாக நம்பிக்கையாளர் களிடமிருந்து நெருக்கடியினாலும் தங்களுடைய இல்லங்களை துறந்தனர். பார்வையுடைய வர்களே, இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

[59:1] வானங்கள், மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன் றும் கடவுள்-ஐத் துதித்துக் கொண்டிருக் கின்றன, மேலும் அவர் தான் சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்.

[59:3] வெளியேறும்படி அவர்களைக் கடவுள் நிர்ப்பந்தித்திருக்காவிட்டால், (வெளியேறும்படி அவர்களை நிர்ப்பந்தித்ததைவிட இன்னும் மிக மோசமாக) இவ்வுலகில் அவர்களை அவர் பழிவாங்கியிருப்பார். மறுவுலகில் நரகத்தின் தண்டனைக்கென அவர்களை அவர் ஒப்படைத்து விடுவார்.