Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 59:22 — வெளியேற்றம்

அவர்தான் ஒரே கடவுள்; அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. அனைத்து இரகசியங் களையும் மற்றும் அறிவிப்புக்களையும் அறிந் தவர். அவர்தான் மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.

[59:21] இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் வெளிப்படுத்தியிருப்போமாயின் கடவுள்-ன் மீதுள்ள அச்சத்தால் அது நடுநடுங்கி பொடிப் பொடியாகி இருப்பதை நீர் கண்டிருப்பீர், அவர்கள் சிந்திக்கக் கூடும் என்பதற்காக, இத்தகைய உதாரணங்களை நாம் மக்களுக்கு எடுத்துரைக்கின்றோம்.

[59:23] அவர்தான் ஒரே கடவுள்; அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. அரசர், மிகப் புனிதமானவர், அமைதியுடையவர், மிகுந்த நம்பிக்கைக் குரியவர், மேலான அதிகாரம் மிக்கவர், சர்வ வல்லமையுடையவர், மிகவும் சக்திநிறைந்தவர், மிகவும் கௌரவமானவர், கடவுள் துதிப்பிற் குரியவர்; பங்காளிகள் கொண்டிருப்பதை விடவும் மிக மேலானவர்.