Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:125 — கால்நடை

கடவுள் எவரையெல்லாம் வழி நடத்த நாடுகின்றாரோ, அவருடைய நெஞ்சத்தை அடிபணிதலின்பால் விசாலமாகத் திறக்கும்படி அவர் செய்கின்றார். மேலும் அவர், எவரையெல்லாம் வழிகேட்டிற்கு அனுப்ப நாடுகின்றாரோ அவருடைய நெஞ்சத்தை, வானத்தை நோக்கி ஏறுபவனுடையதைப் போன்று சகிப்புத் தன்மையற்றதாகவும், குறுகலானதாகவும் ஆக்கி விடுகின்றார். * கடவுள் நம்ப மறுப்பவர்கள் மீது இவ்வாறு ஒரு சாபத்தை ஏற்படுத்துகின்றார்.

[6:124] ஒரு பலமான சான்று அவர்களிடம் வரும்போது அவர்கள், “கடவுள் - உடைய தூதர்களுக்கு கொடுக்கப்பட்டது, எங்களுக்கு கொடுக்கப் படாத வரை நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்!” என்று கூறுகின்றார்கள். அவருடைய செய்தியை அறிவிக்க சிறந்த தகுதியுடையவர் யார் என்பது கடவுள்-க்குத் துல்லியமாக தெரியும்.* இது போன்ற குற்றவாளிகள், அவர்களுடைய தீய சதிச்செயல்களின் விளைவுகளாக கடவுள்-இடத்தில் சிறுமை யையும், மேலும் பயங்கரமான தண்டனை யையும் அனுபவிப்பார்கள்.

[6:126] இதுதான் உங்களுடைய இரட்சகரை அடைய நேரான பாதையாகும். கவனிக்கக்கூடிய மக்களுக்கு நாம் வெளிப்பாடுகளை விளக்கி யுள்ளோம்.