Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:126 — கால்நடை

இதுதான் உங்களுடைய இரட்சகரை அடைய நேரான பாதையாகும். கவனிக்கக்கூடிய மக்களுக்கு நாம் வெளிப்பாடுகளை விளக்கி யுள்ளோம்.

[6:125] கடவுள் எவரையெல்லாம் வழி நடத்த நாடுகின்றாரோ, அவருடைய நெஞ்சத்தை அடிபணிதலின்பால் விசாலமாகத் திறக்கும்படி அவர் செய்கின்றார். மேலும் அவர், எவரையெல்லாம் வழிகேட்டிற்கு அனுப்ப நாடுகின்றாரோ அவருடைய நெஞ்சத்தை, வானத்தை நோக்கி ஏறுபவனுடையதைப் போன்று சகிப்புத் தன்மையற்றதாகவும், குறுகலானதாகவும் ஆக்கி விடுகின்றார். * கடவுள் நம்ப மறுப்பவர்கள் மீது இவ்வாறு ஒரு சாபத்தை ஏற்படுத்துகின்றார்.

[6:127] அவர்கள் தங்களுடைய இரட்சகரிடத்தில் அமைதியான வசிப்பிடத்திற்கு தகுதி பெற்று விட்டார்கள்; அவர்களுடைய காரியங்களுக்கு வெகுமதியாக, அவர்தான் அவர்களுடைய இரட்சகரும் எஜமானரும் ஆக இருக்கின்றார்.