குர்ஆன் 6:127 — கால்நடை
அவர்கள் தங்களுடைய இரட்சகரிடத்தில் அமைதியான வசிப்பிடத்திற்கு தகுதி பெற்று விட்டார்கள்; அவர்களுடைய காரியங்களுக்கு வெகுமதியாக, அவர்தான் அவர்களுடைய இரட்சகரும் எஜமானரும் ஆக இருக்கின்றார்.
[6:126] இதுதான் உங்களுடைய இரட்சகரை அடைய நேரான பாதையாகும். கவனிக்கக்கூடிய மக்களுக்கு நாம் வெளிப்பாடுகளை விளக்கி யுள்ளோம்.
[6:128] அவர்கள் அனைவரையும் அவர் ஒன்று கூட்டும் அந்த நாள் வரும் போது, ஜின்களே, மனிதர்களில் பெரும்பாலானவர்களை நீங்கள் உங்களுக்கென எடுத்துக் கொண்டீர்கள் (என்று கூறுவார்). அவர்களுடைய மனிதக் கூட்டாளிகள், “எங்களுடைய இரட்சகரே நீர் எங்களுக்குத் தந்த ஆயுட்காலத் தவணையை நாங்கள் வீணாக்கும் வரை, நாங்கள் ஒருவர் மற்றவருடைய துணையில் சுகம் அனுபவித்தோம்” என்று கூறுவார்கள். “நரகமே உங்களுடைய விதியாகும்” என்று அவர் கூறுவார். கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்க அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். உங்களுடைய இரட்சகர் ஞானமிக்கவர், எல்லாம் அறிந்தவர்.