குர்ஆன் 60:12 — பரிசோதனை
வேதம் வழங்கப்பட்டவரே, (நம்ப மறுப்பவர்களைக் கைவிட்டு விட்டவர்களான) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் புகலிடம் தேடுவதற்காக வந்து, அவர்கள் கடவுள்-உடன் எந்த இணைத் தெய்வங்களையும் அமைத்துக் கொள்ள மாட்டோம், அன்றித் திருடமாட்டோம், அன்றி விபச்சாரம் செய்ய மாட்டோம், அன்றித் தங்களுடைய குழந்தைகளைக் கொல்ல மாட்டோம், அன்றி பொய்மை எதனையும் இட்டுக்கட்ட மாட்டோம், அன்றி உம்முடைய நன்னெறியான கட்டளைகளுக்குக் கீழ்ப்படியா திருக்கமாட்டோம் என்று உம்மிடம் உறுதிமொழி அளித்தால், நீர் அவர்களுடைய உறுதிமொழியை ஏற்றுக் கொள்ளவும், மேலும் அவர்களுடைய பாவங்களை மன்னிக்கும்படிக் கடவுள்-ஐப் பிரார்த்திக்கவும் வேண்டும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[60:11] உங்கள் மனைவியரில் எவரேனும் எதிரிகளின் பாசறையில் சேர்ந்து கொண்டால், மேலும் சண்டையிடுவதற்கு நீங்கள் நிர்பந்திக்கப் பட்டால், தங்கள் மனைவியரை இழந்த அந்த ஆண்களுக்கு, அவர்கள் தங்கள் மனைவியருக்காகச் செலவு செய்ததைக் கொடுப்பதன் மூலம் நஷ்டஈடு செய்ய எதிரியை நீங்கள் நிர்பந்திக்க வேண்டும். எவர் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களோ அந்தக் கடவுள்-இடம் நீங்கள் பயபக்தியோடிருக்க வேண்டும்.
[60:13] நம்பிக்கை கொண்டோரே, கடவுள் கோபம் கொண்டிருக்கின்ற மேலும் எதிர்பார்க்கவே இயலாதவாறு நம்பமறுப்பில் ஒட்டிக் கொண்டு விட்ட மக்களுடனும் நீங்கள் நட்புக் கொள்ளா தீர்கள்; ஏற்கனவே சமாதிகளில் இருக்கின்ற நம்ப மறுப்பவர்களைப் போல் அதே விதமாக அவர்கள் எதிர்பார்க்க இயலாதவர்களாக இருக்கின்றனர்.