குர்ஆன் 60:11 — பரிசோதனை
உங்கள் மனைவியரில் எவரேனும் எதிரிகளின் பாசறையில் சேர்ந்து கொண்டால், மேலும் சண்டையிடுவதற்கு நீங்கள் நிர்பந்திக்கப் பட்டால், தங்கள் மனைவியரை இழந்த அந்த ஆண்களுக்கு, அவர்கள் தங்கள் மனைவியருக்காகச் செலவு செய்ததைக் கொடுப்பதன் மூலம் நஷ்டஈடு செய்ய எதிரியை நீங்கள் நிர்பந்திக்க வேண்டும். எவர் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களோ அந்தக் கடவுள்-இடம் நீங்கள் பயபக்தியோடிருக்க வேண்டும்.
[60:10] நம்பிக்கை கொண்டோரே, நம்பிக்கை கொண்ட பெண்கள் (எதிரியைக் கைவிட்டு விட்டு மேலும்) உங்களிடம் புகலிடம் கேட்கும்போது, நீங்கள் அவர்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய நம்பிக்கையைக் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார். அவர்கள் நம்பிக்கையாளர்கள் தான் என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொண்டு விட்டால், நம்ப மறுப்பவர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விட வேண்டாம். அவர்களுடன் திருமண உறவில் தொடர்ந்திருப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப் பட்டவர்கள் அல்ல, அன்றி அவர்களை மணந்து கொள்ள நம்ப மறுப்பவர்களை அனுமதிக்கவும் வேண்டாம். நம்ப மறுப்பவர்கள் செலுத்திய வரதட்சணையை திருப்பிக் கொடுத்து விடுங்கள். அவர்களுக்குரிய வரதட்சணையை நீங்கள் செலுத்தி விட்டால், அவர்களைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் நீங்கள் தவறெதுவும் செய்து விடவில்லை. நம்ப மறுக்கின்ற மனைவியரை (அவர்கள் எதிரியுடன் சேர்ந்து கொள்ள விரும்பினால்) நீங்கள் தடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் செலுத்திய வரதட்சணைத் தொகையை நீங்கள் அவர்களிடம் கேட்கலாம், மேலும் அவர்கள் கொடுத்தவற்றை அவர்கள் கேட்கலாம். இது கடவுள்-ன் தீர்ப்பாகும்; அவர் உங்களுக்கிடையில் தீர்ப்பளிக்கின்றார். கடவள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[60:12] வேதம் வழங்கப்பட்டவரே, (நம்ப மறுப்பவர்களைக் கைவிட்டு விட்டவர்களான) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் புகலிடம் தேடுவதற்காக வந்து, அவர்கள் கடவுள்-உடன் எந்த இணைத் தெய்வங்களையும் அமைத்துக் கொள்ள மாட்டோம், அன்றித் திருடமாட்டோம், அன்றி விபச்சாரம் செய்ய மாட்டோம், அன்றித் தங்களுடைய குழந்தைகளைக் கொல்ல மாட்டோம், அன்றி பொய்மை எதனையும் இட்டுக்கட்ட மாட்டோம், அன்றி உம்முடைய நன்னெறியான கட்டளைகளுக்குக் கீழ்ப்படியா திருக்கமாட்டோம் என்று உம்மிடம் உறுதிமொழி அளித்தால், நீர் அவர்களுடைய உறுதிமொழியை ஏற்றுக் கொள்ளவும், மேலும் அவர்களுடைய பாவங்களை மன்னிக்கும்படிக் கடவுள்-ஐப் பிரார்த்திக்கவும் வேண்டும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.