Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 60:10 — பரிசோதனை

يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِذا جاءَكُمُ المُؤمِنٰتُ مُهٰجِرٰتٍ فَامتَحِنوهُنَّ ۖ اللَّهُ أَعلَمُ بِإيمٰنِهِنَّ ۖ فَإِن عَلِمتُموهُنَّ مُؤمِنٰتٍ فَلا تَرجِعوهُنَّ إِلَى الكُفّارِ ۖ لا هُنَّ حِلٌّ لَهُم وَلا هُم يَحِلّونَ لَهُنَّ ۖ وَءاتوهُم ما أَنفَقوا ۚ وَلا جُناحَ عَلَيكُم أَن تَنكِحوهُنَّ إِذا ءاتَيتُموهُنَّ أُجورَهُنَّ ۚ وَلا تُمسِكوا بِعِصَمِ الكَوافِرِ وَسـَٔلوا ما أَنفَقتُم وَليَسـَٔلوا ما أَنفَقوا ۚ ذٰلِكُم حُكمُ اللَّهِ ۖ يَحكُمُ بَينَكُم ۚ وَاللَّهُ عَليمٌ حَكيمٌ

நம்பிக்கை கொண்டோரே, நம்பிக்கை கொண்ட பெண்கள் (எதிரியைக் கைவிட்டு விட்டு மேலும்) உங்களிடம் புகலிடம் கேட்கும்போது, நீங்கள் அவர்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய நம்பிக்கையைக் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார். அவர்கள் நம்பிக்கையாளர்கள் தான் என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொண்டு விட்டால், நம்ப மறுப்பவர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விட வேண்டாம். அவர்களுடன் திருமண உறவில் தொடர்ந்திருப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப் பட்டவர்கள் அல்ல, அன்றி அவர்களை மணந்து கொள்ள நம்ப மறுப்பவர்களை அனுமதிக்கவும் வேண்டாம். நம்ப மறுப்பவர்கள் செலுத்திய வரதட்சணையை திருப்பிக் கொடுத்து விடுங்கள். அவர்களுக்குரிய வரதட்சணையை நீங்கள் செலுத்தி விட்டால், அவர்களைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் நீங்கள் தவறெதுவும் செய்து விடவில்லை. நம்ப மறுக்கின்ற மனைவியரை (அவர்கள் எதிரியுடன் சேர்ந்து கொள்ள விரும்பினால்) நீங்கள் தடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் செலுத்திய வரதட்சணைத் தொகையை நீங்கள் அவர்களிடம் கேட்கலாம், மேலும் அவர்கள் கொடுத்தவற்றை அவர்கள் கேட்கலாம். இது கடவுள்-ன் தீர்ப்பாகும்; அவர் உங்களுக்கிடையில் தீர்ப்பளிக்கின்றார். கடவள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

[60:9] உங்களுடைய மார்க்கத்தின் காரணமாக உங்களுடன் சண்டையிட்டு, உங்களுடைய வீடுகளை விட்டு உங்களை வெளியேற்றி, மேலும் உங்களை வெளியேற்றுவதற்காக மற்றவர்களுடன் ஒன்று சேர்ந்து கொள்பவர்களுடன் நட்புக் கொள்வதிலிருந்து மட்டுமே கடவுள் உங்களைத் தடுக்கின்றார். நீங்கள் அவர்களுடன் நட்புக் கொள்ள வேண்டாம். அவர்களுடன் நட்புக் கொள்பவர்கள் தான் வரம்பு மீறுபவர்கள்.

[60:11] உங்கள் மனைவியரில் எவரேனும் எதிரிகளின் பாசறையில் சேர்ந்து கொண்டால், மேலும் சண்டையிடுவதற்கு நீங்கள் நிர்பந்திக்கப் பட்டால், தங்கள் மனைவியரை இழந்த அந்த ஆண்களுக்கு, அவர்கள் தங்கள் மனைவியருக்காகச் செலவு செய்ததைக் கொடுப்பதன் மூலம் நஷ்டஈடு செய்ய எதிரியை நீங்கள் நிர்பந்திக்க வேண்டும். எவர் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களோ அந்தக் கடவுள்-இடம் நீங்கள் பயபக்தியோடிருக்க வேண்டும்.