குர்ஆன் 60:9 — பரிசோதனை
உங்களுடைய மார்க்கத்தின் காரணமாக உங்களுடன் சண்டையிட்டு, உங்களுடைய வீடுகளை விட்டு உங்களை வெளியேற்றி, மேலும் உங்களை வெளியேற்றுவதற்காக மற்றவர்களுடன் ஒன்று சேர்ந்து கொள்பவர்களுடன் நட்புக் கொள்வதிலிருந்து மட்டுமே கடவுள் உங்களைத் தடுக்கின்றார். நீங்கள் அவர்களுடன் நட்புக் கொள்ள வேண்டாம். அவர்களுடன் நட்புக் கொள்பவர்கள் தான் வரம்பு மீறுபவர்கள்.
[60:8] உங்களுடைய மார்க்கத்தின் காரணமாக உங்களுடன் சண்டையிடாத, மேலும் உங்களு டைய வீடுகளிலிருந்து உங்களை வெளியேற் றாதவர்களுடன் நட்புக் கொள்வதிலிருந்து கடவுள் உங்களைத் தடுக்கவில்லை. நீங்கள் அவர்களுடன் நட்புக் கொள்ளலாம், மேலும் அவர்கள் பால் நீதத்துடன் நடந்து கொள்ளுங்கள். நீதிமான்களைக் கடவுள் நேசிக்கின்றார்.
[60:10] நம்பிக்கை கொண்டோரே, நம்பிக்கை கொண்ட பெண்கள் (எதிரியைக் கைவிட்டு விட்டு மேலும்) உங்களிடம் புகலிடம் கேட்கும்போது, நீங்கள் அவர்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய நம்பிக்கையைக் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார். அவர்கள் நம்பிக்கையாளர்கள் தான் என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொண்டு விட்டால், நம்ப மறுப்பவர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விட வேண்டாம். அவர்களுடன் திருமண உறவில் தொடர்ந்திருப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப் பட்டவர்கள் அல்ல, அன்றி அவர்களை மணந்து கொள்ள நம்ப மறுப்பவர்களை அனுமதிக்கவும் வேண்டாம். நம்ப மறுப்பவர்கள் செலுத்திய வரதட்சணையை திருப்பிக் கொடுத்து விடுங்கள். அவர்களுக்குரிய வரதட்சணையை நீங்கள் செலுத்தி விட்டால், அவர்களைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் நீங்கள் தவறெதுவும் செய்து விடவில்லை. நம்ப மறுக்கின்ற மனைவியரை (அவர்கள் எதிரியுடன் சேர்ந்து கொள்ள விரும்பினால்) நீங்கள் தடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் செலுத்திய வரதட்சணைத் தொகையை நீங்கள் அவர்களிடம் கேட்கலாம், மேலும் அவர்கள் கொடுத்தவற்றை அவர்கள் கேட்கலாம். இது கடவுள்-ன் தீர்ப்பாகும்; அவர் உங்களுக்கிடையில் தீர்ப்பளிக்கின்றார். கடவள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.