Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 60:8 — பரிசோதனை

உங்களுடைய மார்க்கத்தின் காரணமாக உங்களுடன் சண்டையிடாத, மேலும் உங்களு டைய வீடுகளிலிருந்து உங்களை வெளியேற் றாதவர்களுடன் நட்புக் கொள்வதிலிருந்து கடவுள் உங்களைத் தடுக்கவில்லை. நீங்கள் அவர்களுடன் நட்புக் கொள்ளலாம், மேலும் அவர்கள் பால் நீதத்துடன் நடந்து கொள்ளுங்கள். நீதிமான்களைக் கடவுள் நேசிக்கின்றார்.

[60:7] உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள பகைமையைக் கடவுள் நேசமாக மாற்றி விடக் கூடும். கடவுள் சர்வ சக்தியுடையவர். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[60:9] உங்களுடைய மார்க்கத்தின் காரணமாக உங்களுடன் சண்டையிட்டு, உங்களுடைய வீடுகளை விட்டு உங்களை வெளியேற்றி, மேலும் உங்களை வெளியேற்றுவதற்காக மற்றவர்களுடன் ஒன்று சேர்ந்து கொள்பவர்களுடன் நட்புக் கொள்வதிலிருந்து மட்டுமே கடவுள் உங்களைத் தடுக்கின்றார். நீங்கள் அவர்களுடன் நட்புக் கொள்ள வேண்டாம். அவர்களுடன் நட்புக் கொள்பவர்கள் தான் வரம்பு மீறுபவர்கள்.