குர்ஆன் 60:7 — பரிசோதனை
உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள பகைமையைக் கடவுள் நேசமாக மாற்றி விடக் கூடும். கடவுள் சர்வ சக்தியுடையவர். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[60:6] கடவுள் மற்றும் இறுதி நாளைத் தேடுபவர்களுக்கு நல்லதொரு முன்னுதாரணம் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. திரும்பிச்சென்று விடுபவர்களைப் பொறுத்தவரை, (அவர்களிடம்) கடவுள் எந்தத் தேவையுமற்றவர், மிகவும் புகழுக்குரியவர்.
[60:8] உங்களுடைய மார்க்கத்தின் காரணமாக உங்களுடன் சண்டையிடாத, மேலும் உங்களு டைய வீடுகளிலிருந்து உங்களை வெளியேற் றாதவர்களுடன் நட்புக் கொள்வதிலிருந்து கடவுள் உங்களைத் தடுக்கவில்லை. நீங்கள் அவர்களுடன் நட்புக் கொள்ளலாம், மேலும் அவர்கள் பால் நீதத்துடன் நடந்து கொள்ளுங்கள். நீதிமான்களைக் கடவுள் நேசிக்கின்றார்.