குர்ஆன் 60:6 — பரிசோதனை
கடவுள் மற்றும் இறுதி நாளைத் தேடுபவர்களுக்கு நல்லதொரு முன்னுதாரணம் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. திரும்பிச்சென்று விடுபவர்களைப் பொறுத்தவரை, (அவர்களிடம்) கடவுள் எந்தத் தேவையுமற்றவர், மிகவும் புகழுக்குரியவர்.
[60:5] “எங்கள் இரட்சகரே, நம்பமறுப்பவர்களால் அடக்குமுறை செய்யப்பட்டவர்களாக இருக்க எங்களை விட்டுவிடாதீர், மேலும் எங்களை மன்னிப்பீராக. நீரே சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்”.
[60:7] உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள பகைமையைக் கடவுள் நேசமாக மாற்றி விடக் கூடும். கடவுள் சர்வ சக்தியுடையவர். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.