Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 60:5 — பரிசோதனை

“எங்கள் இரட்சகரே, நம்பமறுப்பவர்களால் அடக்குமுறை செய்யப்பட்டவர்களாக இருக்க எங்களை விட்டுவிடாதீர், மேலும் எங்களை மன்னிப்பீராக. நீரே சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்”.

[60:4] ஆப்ரஹாம் மற்றும் அவருடன் இருந்தவர்கள் மூலம் உங்களுக்கு நல்லதொரு முன்னு தாரணம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுடைய சமூகத்தாரிடம் “உங்களையும் கடவுள்-ஐ அன்றி நீங்கள் வழிபடுபவற்றையும் விட்டு நாங்கள் விலகிக் கொண்டோம். உங்களை நாங்கள் பகிரங்கமாகக் கண்டனம் செய்கின்றோம், மேலும் கடவுள் மட்டும்* என்பதில் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, எங்களிடமிருந்து பகைமையையும் மற்றும் வெறுப்பையும் தவிர எந்த ஒன்றையும் நீங்கள் காணமாட்டீர்கள்” என்று கூறினார்கள். ஆயினும், அவர் தன் தந்தையிடம், “உம்முடைய பாவமன்னிப்பிற்காக நான் பிரார்த்திப்பேன்,** ஆனால் கடவுள்-இடமிருந்து உம்மைக் காக்கின்ற எந்தச் சக்தியையும் நான் பெற்றிருக்கவில்லை,” என்று கூறிய பொழுது, ஆப்ரஹாம் ஒரு தவறு புரிந்துவிட்டார். “ எங்கள் இரட்சகரே, நாங்கள் உம்மிடம் பொறுப்பேற்படுத்துகின்றோம், மேலும் உமக்கு அடிபணிகின்றோம்; இறுதி விதியானது உம்வசமே உள்ளது.

[60:6] கடவுள் மற்றும் இறுதி நாளைத் தேடுபவர்களுக்கு நல்லதொரு முன்னுதாரணம் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. திரும்பிச்சென்று விடுபவர்களைப் பொறுத்தவரை, (அவர்களிடம்) கடவுள் எந்தத் தேவையுமற்றவர், மிகவும் புகழுக்குரியவர்.