குர்ஆன் 60:4 — பரிசோதனை
قَد كانَت لَكُم أُسوَةٌ حَسَنَةٌ فى إِبرٰهيمَ وَالَّذينَ مَعَهُ إِذ قالوا لِقَومِهِم إِنّا بُرَءٰؤُا۟ مِنكُم وَمِمّا تَعبُدونَ مِن دونِ اللَّهِ كَفَرنا بِكُم وَبَدا بَينَنا وَبَينَكُمُ العَدٰوَةُ وَالبَغضاءُ أَبَدًا حَتّىٰ تُؤمِنوا بِاللَّهِ وَحدَهُ إِلّا قَولَ إِبرٰهيمَ لِأَبيهِ لَأَستَغفِرَنَّ لَكَ وَما أَملِكُ لَكَ مِنَ اللَّهِ مِن شَيءٍ ۖ رَبَّنا عَلَيكَ تَوَكَّلنا وَإِلَيكَ أَنَبنا وَإِلَيكَ المَصيرُ
ஆப்ரஹாம் மற்றும் அவருடன் இருந்தவர்கள் மூலம் உங்களுக்கு நல்லதொரு முன்னு தாரணம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுடைய சமூகத்தாரிடம் “உங்களையும் கடவுள்-ஐ அன்றி நீங்கள் வழிபடுபவற்றையும் விட்டு நாங்கள் விலகிக் கொண்டோம். உங்களை நாங்கள் பகிரங்கமாகக் கண்டனம் செய்கின்றோம், மேலும் கடவுள் மட்டும்* என்பதில் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, எங்களிடமிருந்து பகைமையையும் மற்றும் வெறுப்பையும் தவிர எந்த ஒன்றையும் நீங்கள் காணமாட்டீர்கள்” என்று கூறினார்கள். ஆயினும், அவர் தன் தந்தையிடம், “உம்முடைய பாவமன்னிப்பிற்காக நான் பிரார்த்திப்பேன்,** ஆனால் கடவுள்-இடமிருந்து உம்மைக் காக்கின்ற எந்தச் சக்தியையும் நான் பெற்றிருக்கவில்லை,” என்று கூறிய பொழுது, ஆப்ரஹாம் ஒரு தவறு புரிந்துவிட்டார். “ எங்கள் இரட்சகரே, நாங்கள் உம்மிடம் பொறுப்பேற்படுத்துகின்றோம், மேலும் உமக்கு அடிபணிகின்றோம்; இறுதி விதியானது உம்வசமே உள்ளது.
[60:3] உங்களுடைய உறவினர்களும், மற்றும் உங் களுடைய செல்வமும் ஒருபோதும் உங்களுக்கு உதவ இயலாது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப் பப்படுகின்ற நாளில், உங்களுக்கிடையில் அவர் தீர்ப்பளிப்பார். கடவுள் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் பார்ப்பவராக இருக்கின்றார்.
[60:5] “எங்கள் இரட்சகரே, நம்பமறுப்பவர்களால் அடக்குமுறை செய்யப்பட்டவர்களாக இருக்க எங்களை விட்டுவிடாதீர், மேலும் எங்களை மன்னிப்பீராக. நீரே சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்”.