குர்ஆன் 60:3 — பரிசோதனை
உங்களுடைய உறவினர்களும், மற்றும் உங் களுடைய செல்வமும் ஒருபோதும் உங்களுக்கு உதவ இயலாது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப் பப்படுகின்ற நாளில், உங்களுக்கிடையில் அவர் தீர்ப்பளிப்பார். கடவுள் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் பார்ப்பவராக இருக்கின்றார்.
[60:2] அவர்கள் உங்களை எதிர்கொள்ளும் பொழு தெல்லாம், அவர்கள் உங்களை விரோதிகளைப் போல் நடத்துகின்றனர், மேலும் தங்களுடைய கரங்களாலும் நாவுகளாலும் உங்களைத் துன்புறுத்துகின்றனர். நீங்கள் நம்பமறுக்க வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர்.
[60:4] ஆப்ரஹாம் மற்றும் அவருடன் இருந்தவர்கள் மூலம் உங்களுக்கு நல்லதொரு முன்னு தாரணம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுடைய சமூகத்தாரிடம் “உங்களையும் கடவுள்-ஐ அன்றி நீங்கள் வழிபடுபவற்றையும் விட்டு நாங்கள் விலகிக் கொண்டோம். உங்களை நாங்கள் பகிரங்கமாகக் கண்டனம் செய்கின்றோம், மேலும் கடவுள் மட்டும்* என்பதில் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, எங்களிடமிருந்து பகைமையையும் மற்றும் வெறுப்பையும் தவிர எந்த ஒன்றையும் நீங்கள் காணமாட்டீர்கள்” என்று கூறினார்கள். ஆயினும், அவர் தன் தந்தையிடம், “உம்முடைய பாவமன்னிப்பிற்காக நான் பிரார்த்திப்பேன்,** ஆனால் கடவுள்-இடமிருந்து உம்மைக் காக்கின்ற எந்தச் சக்தியையும் நான் பெற்றிருக்கவில்லை,” என்று கூறிய பொழுது, ஆப்ரஹாம் ஒரு தவறு புரிந்துவிட்டார். “ எங்கள் இரட்சகரே, நாங்கள் உம்மிடம் பொறுப்பேற்படுத்துகின்றோம், மேலும் உமக்கு அடிபணிகின்றோம்; இறுதி விதியானது உம்வசமே உள்ளது.