குர்ஆன் 62:10 — வெள்ளிக்கிழ
தொழுகை முடிந்து விட்டவுடன், கடவுள்-ன் வெகுமதிகளைத் தேடுவதற்காக பூமி முழுவதும் நீங்கள் பரவிச் செல்லலாம், மேலும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, கடவுள்-ஐ அடிக்கடி நினைவில் கொள்ளுங்கள்.
[62:9] நம்பிக்கை கொண்டோரே, வெள்ளிக்கிழமை அன்று கூட்டுத்தொழுகை (ஸலாத் அல்-ஜுமுஆ) அறிவிக்கப்படும் பொழுது, கடவுள்-ஐ நினைவு கூர்வதற்காக நீங்கள் விரைந்து செல்லவும், மேலும் வேலைகள் அனைத்தையும் விட்டு விடவும் வேண்டும். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் சிறந்ததாகும்.
[62:11] அவர்களில் சிலர் ஒரு வியாபாரப் பரிவர்த் தனையையோ, அல்லது பொழுதுபோக்கினை யோ காண நேரும்போது, உம்மை நின்று கொண்டிருக்க விட்டுவிட்டு அவர்கள் அதன்பால் விரைந்து சென்று விடுகின்றனர்! “கடவுள் வசமிருப்பது பொழுது போக்கினை யோ அல்லது வியாபாரத்தையோ விட மிகவும் மேலானதாகும். கடவுள் தான் வழங்குபவர் களில் மிகச் சிறந்தவர்” என்று கூறுவீராக.