குர்ஆன் 63:3 — நயவஞ்சகர்க
இது ஏனெனில், அவர்கள் நம்பிக்கை கொண் டனர், பின்னர் நம்ப மறுத்து விட்டனர். ஆகையால், அவர்களுடைய மனங்கள் தடுக்கப்பட்டு விட்டன; அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
[63:2] வெளிப்படையான தங்களுடைய விசுவாசம் எனும் வெளிவேஷத்தின் கீழ், அவர்கள் கடவுள்-ன் பாதையிலிருந்து மக்களை விரட்டு கின்றனர். அவர்கள் செய்வது உண்மையில் துக்ககரமானதாகும்.
[63:4] அவர்களை நீர் காணும் பொழுது, அவர்களுடைய தோற்றங்களால் நீர் கவரப்படக் கூடும். மேலும் அவர்கள் பேசும் பொழுது, அவர்களுடைய சொல்வன்மையை நீர் கவனத்துடன் செவியேற்கக் கூடும். அவர்கள் நிற்கின்ற மரக் கட்டைகளைப் போன்றவர்கள். ஒவ்வொரு அழைப்பும் அவர்க ளுக்கு எதிரான நோக்கத்தில் உள்ளதென்றே அவர்கள் நினைக்கின்றனர். இவர்கள்தான் மெய்யான விரோதிகள் ஆவர்; அவர்களைக் குறித்து எச்சரிக்கையுடன் இருப்பீராக. கடவுள் அவர்களைக் கண்டனம் செய்கின்றார்; அவர்கள் விலகிச் சென்று விட்டனர்.