குர்ஆன் 65:1 — விவாகரத்து
يٰأَيُّهَا النَّبِىُّ إِذا طَلَّقتُمُ النِّساءَ فَطَلِّقوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحصُوا العِدَّةَ ۖ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُم ۖ لا تُخرِجوهُنَّ مِن بُيوتِهِنَّ وَلا يَخرُجنَ إِلّا أَن يَأتينَ بِفٰحِشَةٍ مُبَيِّنَةٍ ۚ وَتِلكَ حُدودُ اللَّهِ ۚ وَمَن يَتَعَدَّ حُدودَ اللَّهِ فَقَد ظَلَمَ نَفسَهُ ۚ لا تَدرى لَعَلَّ اللَّهَ يُحدِثُ بَعدَ ذٰلِكَ أَمرًا
வேதம் வழங்கப்பட்டவரே, மனிதர்களாகிய நீங்கள் பெண்களை விவாகரத்து செய்யும் போது, விவாகரத்திற்குரியதோர் இடைக்காலத் தவணை பூர்த்தியாகி விட்டதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் அத்தகையதோர் இடைக்காலத் தவணையை மிகத் துல்லியமாகக் கணக்கிட வேண்டும்.* நீங்கள் உங்கள் இரட்சகரான கடவுள்-இடம் பயபக்தியோடிருக்க வேண்டும். அவர்களு டைய வீடுகளிலிருந்து அவர்களை வெளியேற்றி விடாதீர்கள், மேலும் அவர்கள் விபச்சாரம் செய்ததாக நிரூபிக்கப்பட்டாலே அன்றி, அவர் களாகவே வெளியேறி விடுவதற்காக அவர்களை நிர்ப்பந்தித்து, வாழ்க்கையை அவர்களுக்குத் துன்பகரமானதாக ஆக்கிவிடவும் வேண்டாம். இவை கடவுள்-ன் விதிமுறைகளாகும். எவரொ ருவர் கடவுள்-உடைய விதிமுறைகளின் வரம்பு களை மீறுகின்றாரோ, அவர் தனக்கெதிராகவே ஓர் அநீதம் புரிந்து கொள்கின்றார். நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள்; இதிலிருந்து ஏதேனும் நல்லது வெளிவரக் கடவுள் நாடுவதாய் இருக்கக் கூடும்.
[65:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[65:2] இடைக்காலத் தவணை பூர்த்தியடைந்தவுடன், நியாயமாக அவர்களுடன் நீங்கள் சமாதானம் செய்து கொள்ளலாம், அல்லது நியாயமாக முழுவதும் பிரிந்து சென்று விடலாம். கடவுள்-ன் முன்பு விவாகரத்திற்குச் சாட்சியாக நீங்கள் இரு நீதமான சாட்சிகளை வைத்துக் கொள்ள வேண்டும். இது, கடவுள் மற்றும் இறுதி நாளின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு விவரமாக விளக்குவதற்காகவேயாகும். எவரொருவர் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கின்றாரோ, அவருக்கு வெளியேறுகின்ற ஒரு வழியை அவர் உருவாக்குவார்.