Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 65:2 — விவாகரத்து

இடைக்காலத் தவணை பூர்த்தியடைந்தவுடன், நியாயமாக அவர்களுடன் நீங்கள் சமாதானம் செய்து கொள்ளலாம், அல்லது நியாயமாக முழுவதும் பிரிந்து சென்று விடலாம். கடவுள்-ன் முன்பு விவாகரத்திற்குச் சாட்சியாக நீங்கள் இரு நீதமான சாட்சிகளை வைத்துக் கொள்ள வேண்டும். இது, கடவுள் மற்றும் இறுதி நாளின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு விவரமாக விளக்குவதற்காகவேயாகும். எவரொருவர் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கின்றாரோ, அவருக்கு வெளியேறுகின்ற ஒரு வழியை அவர் உருவாக்குவார்.

[65:1] வேதம் வழங்கப்பட்டவரே, மனிதர்களாகிய நீங்கள் பெண்களை விவாகரத்து செய்யும் போது, விவாகரத்திற்குரியதோர் இடைக்காலத் தவணை பூர்த்தியாகி விட்டதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் அத்தகையதோர் இடைக்காலத் தவணையை மிகத் துல்லியமாகக் கணக்கிட வேண்டும்.* நீங்கள் உங்கள் இரட்சகரான கடவுள்-இடம் பயபக்தியோடிருக்க வேண்டும். அவர்களு டைய வீடுகளிலிருந்து அவர்களை வெளியேற்றி விடாதீர்கள், மேலும் அவர்கள் விபச்சாரம் செய்ததாக நிரூபிக்கப்பட்டாலே அன்றி, அவர் களாகவே வெளியேறி விடுவதற்காக அவர்களை நிர்ப்பந்தித்து, வாழ்க்கையை அவர்களுக்குத் துன்பகரமானதாக ஆக்கிவிடவும் வேண்டாம். இவை கடவுள்-ன் விதிமுறைகளாகும். எவரொ ருவர் கடவுள்-உடைய விதிமுறைகளின் வரம்பு களை மீறுகின்றாரோ, அவர் தனக்கெதிராகவே ஓர் அநீதம் புரிந்து கொள்கின்றார். நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள்; இதிலிருந்து ஏதேனும் நல்லது வெளிவரக் கடவுள் நாடுவதாய் இருக்கக் கூடும்.

[65:3] மேலும் அவர் ஒருபோதும் எதிர்பாராப் புறத்தி லிருந்து அவருக்கு வழங்குவார். எவரொருவர் கடவுள் மீது பொறுப்பேற்படுத்துகின்றாரோ, அவருக்கு அவர் போதுமானவர். கடவுள்-ன் கட்டளைகள் நிறைவேற்றப்படும். ஒவ்வொன்றிற்கும் அதன் விதியைக் கடவுள் விதித்திருக்கின்றார்.