குர்ஆன் 65:3 — விவாகரத்து
மேலும் அவர் ஒருபோதும் எதிர்பாராப் புறத்தி லிருந்து அவருக்கு வழங்குவார். எவரொருவர் கடவுள் மீது பொறுப்பேற்படுத்துகின்றாரோ, அவருக்கு அவர் போதுமானவர். கடவுள்-ன் கட்டளைகள் நிறைவேற்றப்படும். ஒவ்வொன்றிற்கும் அதன் விதியைக் கடவுள் விதித்திருக்கின்றார்.
[65:2] இடைக்காலத் தவணை பூர்த்தியடைந்தவுடன், நியாயமாக அவர்களுடன் நீங்கள் சமாதானம் செய்து கொள்ளலாம், அல்லது நியாயமாக முழுவதும் பிரிந்து சென்று விடலாம். கடவுள்-ன் முன்பு விவாகரத்திற்குச் சாட்சியாக நீங்கள் இரு நீதமான சாட்சிகளை வைத்துக் கொள்ள வேண்டும். இது, கடவுள் மற்றும் இறுதி நாளின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு விவரமாக விளக்குவதற்காகவேயாகும். எவரொருவர் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கின்றாரோ, அவருக்கு வெளியேறுகின்ற ஒரு வழியை அவர் உருவாக்குவார்.
[65:4] இறுதி மாதவிடாயை அடைந்து விட்டபெண் களைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஏதேனும் சந்தேகமிருக்குமாயின், அவர்களுடைய இடைக் காலத் தவணை மூன்று மாதங்களாக இருத்தல் வேண்டும். மாதவிடாய் வராமல், அவர்கள் கர்ப்பமாக இருக்கின்றனர் என்று தெரிய வரும் பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் பிரசவிப்பதுடன் அவர்களுடைய இடைக்காலத் தவணை முடிவடைகின்றது. எவரொருவர் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கின்றாரோ, அவருக்கு அவர் ஒவ்வொன்றையும் எளிதாக்கு கின்றார்.