Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 66:7 — தடை செய்தல்

நம்பிக்கை கொள்ள மறுத்தவர்களே, இன்றைய தினம் மன்னிப்புக் கோராதீர்கள். நீங்கள் செய் தவற்றிற்காக மட்டுமே நீங்கள் கூலி கொடுக்கப் படுகின்றீர்கள்.

[66:6] நம்பிக்கை கொண்டோரே, உங்களையும் மேலும் உங்களுடைய குடும்பத்தாரையும், மனிதர் களையும் மற்றும் பாறைகளையும் எரிபொருளாகக் கொண்டிருக்கின்ற அந்நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள். கடவுள்-ன் உத்தரவை ஒரு போதும் மீறாத, கண்டிப்பான மற்றும் வலிமை மிக்க வானவர்கள் அதற்குக்காவலாக இருக்கின்றனர்; செய்யுமாறு அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை எதுவாயினும் அவர்கள் செய்வார்கள்.

[66:8] நம்பிக்கை கொண்டோரே, உறுதி மிக்கதொரு வருந்தித்திருந்துதலாக, நீங்கள் கடவுள்-இடம் வருந்தித்திருந்த வேண்டும். உங்களுடைய இரட்சகர் பின்னர் உங்களுடைய பாவங்களைத் தள்ளுபடி செய்வார், மேலும் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் உங்களை அனுமதிப்பார். அந்நாளில், கடவுள் வேதம் வழங்கப்பட்டவரையும் மற்றும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் ஏமாற்றி விட மாட்டார். அவர்களுடைய ஒளியானது அவர்களு க்கு முன்புறமும் மேலும் அவர்களுடைய வலப் புறமும் ஒளிரும். அவர்கள், “ எங்கள் இரட்சகரே, எங்களுடைய ஒளியை எங்களுக்குப் பூரணப் படுத்துவீராக, மேலும் எங்களை மன்னிப்பீராக, நீர் சர்வ சக்தியுடையவராக இருக்கின்றீர்” என்று கூறுவார்கள்.