குர்ஆன் 66:8 — தடை செய்தல்
நம்பிக்கை கொண்டோரே, உறுதி மிக்கதொரு வருந்தித்திருந்துதலாக, நீங்கள் கடவுள்-இடம் வருந்தித்திருந்த வேண்டும். உங்களுடைய இரட்சகர் பின்னர் உங்களுடைய பாவங்களைத் தள்ளுபடி செய்வார், மேலும் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் உங்களை அனுமதிப்பார். அந்நாளில், கடவுள் வேதம் வழங்கப்பட்டவரையும் மற்றும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் ஏமாற்றி விட மாட்டார். அவர்களுடைய ஒளியானது அவர்களு க்கு முன்புறமும் மேலும் அவர்களுடைய வலப் புறமும் ஒளிரும். அவர்கள், “ எங்கள் இரட்சகரே, எங்களுடைய ஒளியை எங்களுக்குப் பூரணப் படுத்துவீராக, மேலும் எங்களை மன்னிப்பீராக, நீர் சர்வ சக்தியுடையவராக இருக்கின்றீர்” என்று கூறுவார்கள்.
[66:7] நம்பிக்கை கொள்ள மறுத்தவர்களே, இன்றைய தினம் மன்னிப்புக் கோராதீர்கள். நீங்கள் செய் தவற்றிற்காக மட்டுமே நீங்கள் கூலி கொடுக்கப் படுகின்றீர்கள்.
[66:9] வேதம் வழங்கப்பட்டவரே, நம்ப மறுப்பவர் களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் எதிராகப் போராடுவீராக, மேலும் அவர்களிடம் கண்டிப் புடன் இருப்பீராக. அவர்களுடைய தங்குமிடம் ஜஹன்னாவாகும், மேலும் துன்பகரமானதொரு விதியுமாகும்.