குர்ஆன் 66:9 — தடை செய்தல்
வேதம் வழங்கப்பட்டவரே, நம்ப மறுப்பவர் களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் எதிராகப் போராடுவீராக, மேலும் அவர்களிடம் கண்டிப் புடன் இருப்பீராக. அவர்களுடைய தங்குமிடம் ஜஹன்னாவாகும், மேலும் துன்பகரமானதொரு விதியுமாகும்.
[66:8] நம்பிக்கை கொண்டோரே, உறுதி மிக்கதொரு வருந்தித்திருந்துதலாக, நீங்கள் கடவுள்-இடம் வருந்தித்திருந்த வேண்டும். உங்களுடைய இரட்சகர் பின்னர் உங்களுடைய பாவங்களைத் தள்ளுபடி செய்வார், மேலும் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் உங்களை அனுமதிப்பார். அந்நாளில், கடவுள் வேதம் வழங்கப்பட்டவரையும் மற்றும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் ஏமாற்றி விட மாட்டார். அவர்களுடைய ஒளியானது அவர்களு க்கு முன்புறமும் மேலும் அவர்களுடைய வலப் புறமும் ஒளிரும். அவர்கள், “ எங்கள் இரட்சகரே, எங்களுடைய ஒளியை எங்களுக்குப் பூரணப் படுத்துவீராக, மேலும் எங்களை மன்னிப்பீராக, நீர் சர்வ சக்தியுடையவராக இருக்கின்றீர்” என்று கூறுவார்கள்.
[66:10] நம்பமறுத்தவர்களுக்குரிய உதாரணங்களாக நோவாவின் மனைவியையும் மற்றும் லோத்தின் மனைவியையும் கடவுள் எடுத்துரைக்கின்றார். நன்னெறியாளர்களான நம்முடைய அடியார் களில் இருவருக்கு அவர்கள் மணமுடிக்கப் பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் அவர்களு க்குத் துரோகம் புரிந்தனர், மேலும் அதன் விளைவாக, கடவுள்-க்கெதிராக அவர்களால் அவர்களுக்கு எவ்வகையிலும் உதவிட இயல வில்லை. அவர்கள் இருவரிடமும், “நரக நெருப்பில், அதற்குத் தகுதியானவர்களுடன் சேர்ந்து நுழையுங்கள்” என்று கூறப்பட்டது.