குர்ஆன் 66:10 — தடை செய்தல்
நம்பமறுத்தவர்களுக்குரிய உதாரணங்களாக நோவாவின் மனைவியையும் மற்றும் லோத்தின் மனைவியையும் கடவுள் எடுத்துரைக்கின்றார். நன்னெறியாளர்களான நம்முடைய அடியார் களில் இருவருக்கு அவர்கள் மணமுடிக்கப் பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் அவர்களு க்குத் துரோகம் புரிந்தனர், மேலும் அதன் விளைவாக, கடவுள்-க்கெதிராக அவர்களால் அவர்களுக்கு எவ்வகையிலும் உதவிட இயல வில்லை. அவர்கள் இருவரிடமும், “நரக நெருப்பில், அதற்குத் தகுதியானவர்களுடன் சேர்ந்து நுழையுங்கள்” என்று கூறப்பட்டது.
[66:9] வேதம் வழங்கப்பட்டவரே, நம்ப மறுப்பவர் களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் எதிராகப் போராடுவீராக, மேலும் அவர்களிடம் கண்டிப் புடன் இருப்பீராக. அவர்களுடைய தங்குமிடம் ஜஹன்னாவாகும், மேலும் துன்பகரமானதொரு விதியுமாகும்.
[66:11] மேலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் உதாரணமாக ஃபேரோவின் மனைவியைக் கடவுள் எடுத்துரைக்கின்றார். அவர், “ என் இரட்சகரே, சுவனத்தில் உம்மிடம் எனக்கென ஓர் இல்லத்தைக் கட்டுவீராக, மேலும் ஃபேரோ மற்றும் அவனது செயல்களிலிருந்து என்னைக் காப்பீராக; வரம்பு மீறுகின்ற மக்களிடமிருந்து என்னைக் காப்பீராக” என்று கூறினார்.