Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 66:11 — தடை செய்தல்

மேலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் உதாரணமாக ஃபேரோவின் மனைவியைக் கடவுள் எடுத்துரைக்கின்றார். அவர், “ என் இரட்சகரே, சுவனத்தில் உம்மிடம் எனக்கென ஓர் இல்லத்தைக் கட்டுவீராக, மேலும் ஃபேரோ மற்றும் அவனது செயல்களிலிருந்து என்னைக் காப்பீராக; வரம்பு மீறுகின்ற மக்களிடமிருந்து என்னைக் காப்பீராக” என்று கூறினார்.

[66:10] நம்பமறுத்தவர்களுக்குரிய உதாரணங்களாக நோவாவின் மனைவியையும் மற்றும் லோத்தின் மனைவியையும் கடவுள் எடுத்துரைக்கின்றார். நன்னெறியாளர்களான நம்முடைய அடியார் களில் இருவருக்கு அவர்கள் மணமுடிக்கப் பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் அவர்களு க்குத் துரோகம் புரிந்தனர், மேலும் அதன் விளைவாக, கடவுள்-க்கெதிராக அவர்களால் அவர்களுக்கு எவ்வகையிலும் உதவிட இயல வில்லை. அவர்கள் இருவரிடமும், “நரக நெருப்பில், அதற்குத் தகுதியானவர்களுடன் சேர்ந்து நுழையுங்கள்” என்று கூறப்பட்டது.

[66:12] அத்துடன், இம்ரானின் சந்ததியான மேரி. அவர் தன் கற்பைக் காத்துக்கொண்டார், பின்னர் நாம் நம்முடைய ஆவியிலிருந்து அவருக்குள் ஊதினோம். அவர் தன் இரட்சகரின் வார்த்தை கள் மற்றும் அவருடைய வேதங்களின் மீது நம்பிக்கை கொண்டார்; அவர் கீழ்ப்படிந்தவராக இருந்தார்.