குர்ஆன் 66:12 — தடை செய்தல்
அத்துடன், இம்ரானின் சந்ததியான மேரி. அவர் தன் கற்பைக் காத்துக்கொண்டார், பின்னர் நாம் நம்முடைய ஆவியிலிருந்து அவருக்குள் ஊதினோம். அவர் தன் இரட்சகரின் வார்த்தை கள் மற்றும் அவருடைய வேதங்களின் மீது நம்பிக்கை கொண்டார்; அவர் கீழ்ப்படிந்தவராக இருந்தார்.
[66:11] மேலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் உதாரணமாக ஃபேரோவின் மனைவியைக் கடவுள் எடுத்துரைக்கின்றார். அவர், “ என் இரட்சகரே, சுவனத்தில் உம்மிடம் எனக்கென ஓர் இல்லத்தைக் கட்டுவீராக, மேலும் ஃபேரோ மற்றும் அவனது செயல்களிலிருந்து என்னைக் காப்பீராக; வரம்பு மீறுகின்ற மக்களிடமிருந்து என்னைக் காப்பீராக” என்று கூறினார்.