குர்ஆன் 67:14 — அரசுரி
அவர் படைத்தவற்றை அவர் அறியாமலிருப் பாரா? அவர் மகிமை மிக்கவர், மிகவும் நன்கறிந்தவர்.
[67:13] உங்களுடைய கூற்றுக்களை நீங்கள் இரகசிய மாக வைத்துக் கொண்டாலும், அல்லது அவற் றை அறிவித்தாலும், ஆழ்மனதின் எண்ணங் களை அவர் முற்றிலும் அறிந்தவராக இருக்கி ன்றார்.
[67:15] அவர்தான் பூமியை உங்களுடைய பணிக்கென அமைத்தவர். அதன் மூலைகளில் சுற்றித் திரியுங்கள், மேலும் அவருடைய வாழ்வாதாரங் களிலிருந்து உண்ணுங்கள். இறுதியான அழைப்பு ஆணை அவருக்குரியது.