குர்ஆன் 7:165 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவர்களுக்கு நினைவூட்டப்பட்டவற்றை அவர்கள் புறக்கணித்தபோது, தீயவற்றைத் தடுத்தவர்களை நாம் காப்பாற்றினோம், மேலும் தீமை செய்பவர்களை அவர்களுடைய தீய செயல்களின் காரணமாக ஒரு பயங்கரமான தண்டனையைக் கொண்டு வேதனை செய்தோம்.
[7:164] அவர்களில் ஒரு கூட்டத்தினர், “கடவுள் நிச்சயமாக அழித்துவிடவோ அல்லது கடுi மயாக தண்டிக்கவோ போகும் மக்களுக்கு நீங்கள் ஏன் உபதேசிக்க வேண்டும்?” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள், “உங்கள் இரட்ச கரிடம் பிழைபொறுக்கத் தேடுங்கள்,” அவர்கள் காப்பாற்றப்பட்டு விடவும் கூடும் என்று பதிலளித்தனர்.
[7:166] அவர்கள் தொடர்ந்து கட்டளைகளை எதிர்த்த போது நாம் அவர்களிடம், “நீங்கள் இழிவடைந்த குரங்குகளாக ஆகிவிடுங்கள்” என்று கூறினோம்.