குர்ஆன் 7:66 — ஆன்மா தூய்மையடையும் இடம்
அவருடைய சமூகத்தாரில் உள்ள நம்ப மறுத்த தலைவர்கள், “நீர் மூடத்தனமாக நடந்து கொள்வதையே நாங்கள் காண்கின்றோம், மேலும் நீர் ஒரு பொய்யர் என்றே நாங்கள் எண்ணுகின்றோம்” என்று கூறினார்கள்.
[7:65] ஆதுகளிடம் அவருடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர் , “ என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; உங்களுக்கு அவருடன் வேறு தெய்வம் இல்லை. இனி யேனும் நீங்கள் நன்னெறியைக் கடைப்பிடிப் பீர்களா?” என்று கூறினார்.
[7:67] அவர் கூறினார், “என் சமூகத்தாரே, என்னிடத்தில் எந்த மூடத்தனமும் இல்லை; நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடம் இருந்து வந்த ஒரு தூதர் ஆவேன்.