குர்ஆன் 73:20 — அங்கி அணிந்தவர்
إِنَّ رَبَّكَ يَعلَمُ أَنَّكَ تَقومُ أَدنىٰ مِن ثُلُثَىِ الَّيلِ وَنِصفَهُ وَثُلُثَهُ وَطائِفَةٌ مِنَ الَّذينَ مَعَكَ ۚ وَاللَّهُ يُقَدِّرُ الَّيلَ وَالنَّهارَ ۚ عَلِمَ أَن لَن تُحصوهُ فَتابَ عَلَيكُم ۖ فَاقرَءوا ما تَيَسَّرَ مِنَ القُرءانِ ۚ عَلِمَ أَن سَيَكونُ مِنكُم مَرضىٰ ۙ وَءاخَرونَ يَضرِبونَ فِى الأَرضِ يَبتَغونَ مِن فَضلِ اللَّهِ ۙ وَءاخَرونَ يُقٰتِلونَ فى سَبيلِ اللَّهِ ۖ فَاقرَءوا ما تَيَسَّرَ مِنهُ ۚ وَأَقيمُوا الصَّلوٰةَ وَءاتُوا الزَّكوٰةَ وَأَقرِضُوا اللَّهَ قَرضًا حَسَنًا ۚ وَما تُقَدِّموا لِأَنفُسِكُم مِن خَيرٍ تَجِدوهُ عِندَ اللَّهِ هُوَ خَيرًا وَأَعظَمَ أَجرًا ۚ وَاستَغفِرُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ غَفورٌ رَحيمٌ
இரவுப் பொழுதினில் மூன்றில் இரண்டு பாகம், அல்லது அதில் பாதி, அல்லது அதில் மூன்றில் ஒரு பாகம் நீர் தியானிக்கின்றீர், மேலும் உம்முடன் நம்பிக்கை கொண்ட சிலரும் அவ்வாறே செய்கின்றனர் என்பதை உம்முடைய இரட்சகர் அறிகின்றார். இரவையும் பகலையும் கடவுள் வடிவமைத்துள்ளார், மேலும் எப்பொ ழுதும் உங்களால் இதனைச் செய்ய இயலாது என்பதையும் அவர் அறிகின்றார். அவர் உங்களை மன்னித்து விட்டார். அதற்குப் பதிலாக, குர்ஆனிலிருந்து உங்களால் இயன்ற வரை நீங்கள் படிக்க வேண்டும். உங்களில் சிலர் நோயுற்றிருக்கக் கூடும், மற்றவர்கள் கடவுள்-ன் வாழ்வாதாரங்களைத் தேடியவாறு பிரயாண த்தில் இருக்கக் கூடும், மேலும் மற்றவர்கள் கடவுள்-ன் நிமித்தம் பாடுபட்டுக் கொண் டிருக்கக் கூடும் என்பதை அவர் அறிகின்றார். அதிலிருந்து உங்களால் இயன்றவரை நீங்கள் படிக்க வேண்டும், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும், கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக் கவும், மேலும் நன்னெறியெனும் ஒரு கடனைக் கடவுள்-க்குக் கடனளிக்கவும் வேண்டும். உங்களுடைய ஆன்மாக்களுக்காக நீங்கள் முற்படுத்தி அனுப்பி வைக்கின்ற நல்லது எதுவாயினும், அதனை மிகச் சிறந்ததாகவும் தாராளமாக வெகுமதியளிக்கப்பட்டதாகவும் கடவுள்-இடம் நீங்கள் காண்பீர்கள். மேலும் பாவமன்னிப்பிற்காக கடவுள்-இடம் இறைஞ்சிப் பிரார்த்தியுங்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[73:19] இது ஒரு நினைவூட்டலாகும்; எவரெல்லாம் நாடுகின்றாரோ, அவர் தன் இரட்சகரின் பால் தன்னுடைய பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.