குர்ஆன் 74:32 — மறைக்கப்பட்ட இரகசியம்
நிச்சயமாக, சந்திரனின் மீது (நான் ஆணையிடு கின்றேன்).
[74:31] நாம் நரகத்தின் காவலர்களாக வானவர்களை நியமித்தோம், மேலும் அவர்களுடைய எண்ணிக்கையை (19) நாம் நிர்ணயித்தோம் (1) நிராகரிப்பவர்களைக் குழப்புவதற்காக, (2) கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் (இது ஒரு தெய்வீக வேதம் என்று) நம்பவைப்பதற்காக, (3) விசுவாசிகளின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்காக, (4) கிறிஸ்தவர்கள், யூதர்கள், அத்துடன் விசுவாசிகளின் இதயங்களிலிருந்து அனைத்து சந்தேகங்களின் தடயங்களையும் நீக்குவதற்காக, மேலும் (5) தங்கள் இதயங்களில் சந்தேகம் கொண்டிருப்பவர்களையும், நிராகரிப்பவர்களையும் வெளிப்படுத்துவதற்காக; அவர்கள் கூறுவார்கள், "இந்த உருவகத்தால் கடவுள் என்ன அர்த்தப்படுத்தினார்?" கடவுள் இவ்விதமாக அவர் நாடியவரை வழிதவறச் செய்கின்றார், மேலும் அவர் நாடியவரை வழிநடத்துகின்றார். அவரைத் தவிர உமது இரட்சகரின் படைகளை எவரும் அறியார். இது மக்களுக்கு ஒரு நினைவூட்டலாகும்.
[74:33] மேலும் இரவானது அது கடந்து செல்கின்ற போது.