Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:4 — இறுதியான எச்சரிக்கை

இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள் உங்களுடன் ஓர் உடன்படிக்கையில் கையொப்ப மிட்டு அதனை மீறாமலும், அன்றி உங்களுக் கெதிராக மற்றவர்களுடன் ஒன்று சேர்ந்து கொள்ளாமலும் இருந்தால், அவர்களுடனான உங்கள் உடன்படிக்கையை காலாவதியாகும் நாள் வரை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். கடவுள் நன்னெறியாளர்களை நேசிக்கின்றார்.

[9:3] கடவுள் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர் களைக் கைவிட்டு விட்டார், மேலும் அவருடைய தூதரும் அவ்வாறே செய்தார், என்று புனித யாத்திரையின் மகத்தான நாளில் கடவுள் இடமிருந்தும் அவருடைய தூதரிடமிருந்தும் மக்கள் அனைவருக்கும் ஒரு பிரகடனம் இதிலே வெளியிடப்படுகின்றது. இனி நீங்கள் வருந்தித் திருந்தினால், அது உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும். ஆனால் நீங்கள் திரும்பி விட்டால், பின்னர் கடவுள்-இடமிருந்து நீங்கள் தப்பித்து விட முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நம்ப மறுப்போருக்கு வலிமிகுந்ததொரு தண்டனையை வாக்களிப் பீராக.

[9:5] புனித மாதங்கள் கடந்த உடன், (அவர்கள் சமா தானம் செய்து கொள்ள மறுத்தால்) இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களை நீங்கள் போரில் எதிர் கொள்ளும்போது நீங்கள் அவர்களைக் கொல்லலாம், அவர்களைத் தண்டிக்கலாம், மேலும் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் தடுக்கலாம். அவர்கள் வருந்தித்திருந்தி, மேலும் தொடர்புத் தொழுகை களை (ஸலாத்) கடைப்பிடித்து மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) கொடுத்தால், அவர்களைச் செல்ல நீங்கள் விட்டு விட வேண்டும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.