குர்ஆன் 9:8 — இறுதியான எச்சரிக்கை
வெற்றியடையும் ஒரு சந்தர்ப்பம் எப்பொழுதாவது அவர்களுக்குக் கிடைக்கும் பட்சத்தில், உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள உறவு முறையின் எந்த உரிமையையும், அன்றி எந்த உடன்படிக்கையையும் அவர்கள் ஒரு போதும் கடைப்பிடிக்காத போது, எப்படி (ஒரு வாக் குறுதியைக் கேட்க இயலும்). அவர்கள் வெறும் வார்த்தைகளால் உங்களைச் சமாதானப்படுத் தினார்கள், அதே சமயம் அவர்களுடைய இதயங் களோ எதிர்ப்பில் இருக்கின்றன, மேலும் அவர் களில் அதிகமானோர் தீயவர்கள்.
[9:7] கடவுள்-இடமும் அவருடைய தூதரிடமும் எந்த வாக்குறுதியையும் இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்கள் எப்படிக் கேட்க இயலும்? புனித மஸ்ஜிதில் உங்களோடு ஒரு சமாதான உடன் படிக்கையில் கையொப்பமிட்டவர்கள் விதி விலக்காவார்கள். இத்தகையதொரு உடன் படிக்கையை அவர்கள் மதித்து மேலும் அதனை உறுதியாகக் கடைப்பிடித்தால், நீங்களும் அவ்வாறே உறுதியாக கடைப் பிடிக்க வேண்டும். கடவுள் நன்னெறியாளர்களை நேசிக்கின்றார்.
[9:9] அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஓர் அற்ப விலைக்கு வணிகம் செய்து விட்டனர். அதன் விளைவாக, அவர்கள் மக்களை, அவருடைய பாதையில் இருந்து துரத்தி விட்டனர். அவர்கள் செய்தது உண்மையில் துக்ககரமானதாகும்!