Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:7 — இறுதியான எச்சரிக்கை

கடவுள்-இடமும் அவருடைய தூதரிடமும் எந்த வாக்குறுதியையும் இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்கள் எப்படிக் கேட்க இயலும்? புனித மஸ்ஜிதில் உங்களோடு ஒரு சமாதான உடன் படிக்கையில் கையொப்பமிட்டவர்கள் விதி விலக்காவார்கள். இத்தகையதொரு உடன் படிக்கையை அவர்கள் மதித்து மேலும் அதனை உறுதியாகக் கடைப்பிடித்தால், நீங்களும் அவ்வாறே உறுதியாக கடைப் பிடிக்க வேண்டும். கடவுள் நன்னெறியாளர்களை நேசிக்கின்றார்.

[9:6] இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களில் ஒருவர் உங்களோடு பாதுகாப்புடன் கடந்து செல்லும் பாதையை தேடினால், அவருக்கு நீங்கள் பாதுகாப்புடன் கடந்து செல்லும் பாதையை வழங்க வேண்டும், இவ்விதமாக அவர் கடவுள்-ன் வார்த்தையைச் செவியேற்க இயலும், பின்னர் அவருடைய பாதுகாப்பான இடத்திற்கு அவரை அனுப்பி விடுங்கள். இது ஏனெனில் அவர்கள் அறியாத மக்களாக இருக்கின்றனர்.

[9:8] வெற்றியடையும் ஒரு சந்தர்ப்பம் எப்பொழுதாவது அவர்களுக்குக் கிடைக்கும் பட்சத்தில், உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள உறவு முறையின் எந்த உரிமையையும், அன்றி எந்த உடன்படிக்கையையும் அவர்கள் ஒரு போதும் கடைப்பிடிக்காத போது, எப்படி (ஒரு வாக் குறுதியைக் கேட்க இயலும்). அவர்கள் வெறும் வார்த்தைகளால் உங்களைச் சமாதானப்படுத் தினார்கள், அதே சமயம் அவர்களுடைய இதயங் களோ எதிர்ப்பில் இருக்கின்றன, மேலும் அவர் களில் அதிகமானோர் தீயவர்கள்.