Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:6 — இறுதியான எச்சரிக்கை

இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களில் ஒருவர் உங்களோடு பாதுகாப்புடன் கடந்து செல்லும் பாதையை தேடினால், அவருக்கு நீங்கள் பாதுகாப்புடன் கடந்து செல்லும் பாதையை வழங்க வேண்டும், இவ்விதமாக அவர் கடவுள்-ன் வார்த்தையைச் செவியேற்க இயலும், பின்னர் அவருடைய பாதுகாப்பான இடத்திற்கு அவரை அனுப்பி விடுங்கள். இது ஏனெனில் அவர்கள் அறியாத மக்களாக இருக்கின்றனர்.

[9:5] புனித மாதங்கள் கடந்த உடன், (அவர்கள் சமா தானம் செய்து கொள்ள மறுத்தால்) இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களை நீங்கள் போரில் எதிர் கொள்ளும்போது நீங்கள் அவர்களைக் கொல்லலாம், அவர்களைத் தண்டிக்கலாம், மேலும் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் தடுக்கலாம். அவர்கள் வருந்தித்திருந்தி, மேலும் தொடர்புத் தொழுகை களை (ஸலாத்) கடைப்பிடித்து மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) கொடுத்தால், அவர்களைச் செல்ல நீங்கள் விட்டு விட வேண்டும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[9:7] கடவுள்-இடமும் அவருடைய தூதரிடமும் எந்த வாக்குறுதியையும் இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்கள் எப்படிக் கேட்க இயலும்? புனித மஸ்ஜிதில் உங்களோடு ஒரு சமாதான உடன் படிக்கையில் கையொப்பமிட்டவர்கள் விதி விலக்காவார்கள். இத்தகையதொரு உடன் படிக்கையை அவர்கள் மதித்து மேலும் அதனை உறுதியாகக் கடைப்பிடித்தால், நீங்களும் அவ்வாறே உறுதியாக கடைப் பிடிக்க வேண்டும். கடவுள் நன்னெறியாளர்களை நேசிக்கின்றார்.