ஸூரா 15: அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 11:20
ஸூரா 15: அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு
[15:1] அ.ல.ர.* இவை (இந்த எழுத்துக்கள்) இந்த வேதத்தின் சான்றுகளாகும்; ஆழ்ந்ததொரு குர்ஆன்.
[15:2] மிக நிச்சயமாக, நம்ப மறுத்தவர்கள், தாங்கள் அடிபணிந்தோராக இருந்திருக்க வேண்டுமே என்று விரும்புவார்கள்.
[15:3] அவர்கள் உண்ணட்டும், சுகமனுபவிக்கட்டும், மேலும் அவர்களுடைய விருப்பமான எண்ணங் களில் குருட்டுத்தனமாக இருக்கட்டும்; அவர்கள் கண்டு கொள்வார்கள்.
[15:4] ஒரு குறிப்பிட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு ஏற்பவே அன்றி, நாம் எந்தச் சமூத்தையும் ஒருபோதும் அழித்ததில்லை.
[15:5] எந்தச் சமூகத்தின் முடிவும், ஒருபோதும் முற்படுத்தப்படவோ அல்லது தாமதப்படுத்தப் படவோ இயலாது.
[15:6] அவர்கள் கூறினர், “இந்த நினைவூட்டலைப் பெற்றவரே, நீர் புத்தி சுவாதீனமில்லாதவர்.
[15:7] “நீர் உண்மையாளராக இருந்தால், நீர் ஏன் வானவர்களைக் கீழே கொண்டு வரவில்லை?”
