Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

ஸூரா 60: பரிசோதனை — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்

Sura 60: The Test (Al-Mumtahanah)

YouTube · 4:39

ஸூரா 60: பரிசோதனை

[60:1] நம்பிக்கை கொண்டோரே, உங்களிடம் வந்திருக்கின்ற சத்தியத்தை அவர்கள் நம்ப மறுத்துவிட்ட பின்னரும், அன்பையும் நட்பையும் அவர்கள் பால் காட்டியவர்களாக, என்னுடைய விரோதிகளுடனும் உங்களுடைய விரோதி களுடனும் நீங்கள் நட்புக் கொள்ள வேண்டாம். உங்கள் இரட்சகரான, கடவுள் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டதற்காக மட்டுமே, அவர்கள் தூதரையும் மேலும் உங்களையும் தொடர்ந்து துன்புறுத்துகின்றனர். என்னுடைய அருட் கொடைகளைத் தேடியவர்களாக, என் நிமித்தம் போராடுவதற்காக நீங்கள் புறப் பட்டால், எவ்வாறு நீங்கள் அவர்களை இரகசிய மாக நேசிக்க இயலும்? நீங்கள் மறைத்துக் கொள்கின்ற ஒவ்வொன்றையும் மேலும் நீங்கள் அறிவிக்கின்ற ஒவ்வொன்றையும் நான் முற்றிலும் அறிந்திருக்கின்றேன். உங்களுக் கிடையில் இதனைச் செய்கின்றவர்கள் உண்மையில் சரியான பாதையிலிருந்து வழிதவறிச் சென்று விட்டனர்.

[60:2] அவர்கள் உங்களை எதிர்கொள்ளும் பொழு தெல்லாம், அவர்கள் உங்களை விரோதிகளைப் போல் நடத்துகின்றனர், மேலும் தங்களுடைய கரங்களாலும் நாவுகளாலும் உங்களைத் துன்புறுத்துகின்றனர். நீங்கள் நம்பமறுக்க வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர்.

[60:3] உங்களுடைய உறவினர்களும், மற்றும் உங் களுடைய செல்வமும் ஒருபோதும் உங்களுக்கு உதவ இயலாது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப் பப்படுகின்ற நாளில், உங்களுக்கிடையில் அவர் தீர்ப்பளிப்பார். கடவுள் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் பார்ப்பவராக இருக்கின்றார்.

[60:4] ஆப்ரஹாம் மற்றும் அவருடன் இருந்தவர்கள் மூலம் உங்களுக்கு நல்லதொரு முன்னு தாரணம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுடைய சமூகத்தாரிடம் “உங்களையும் கடவுள்-ஐ அன்றி நீங்கள் வழிபடுபவற்றையும் விட்டு நாங்கள் விலகிக் கொண்டோம். உங்களை நாங்கள் பகிரங்கமாகக் கண்டனம் செய்கின்றோம், மேலும் கடவுள் மட்டும்* என்பதில் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, எங்களிடமிருந்து பகைமையையும் மற்றும் வெறுப்பையும் தவிர எந்த ஒன்றையும் நீங்கள் காணமாட்டீர்கள்” என்று கூறினார்கள். ஆயினும், அவர் தன் தந்தையிடம், “உம்முடைய பாவமன்னிப்பிற்காக நான் பிரார்த்திப்பேன்,** ஆனால் கடவுள்-இடமிருந்து உம்மைக் காக்கின்ற எந்தச் சக்தியையும் நான் பெற்றிருக்கவில்லை,” என்று கூறிய பொழுது, ஆப்ரஹாம் ஒரு தவறு புரிந்துவிட்டார். “ எங்கள் இரட்சகரே, நாங்கள் உம்மிடம் பொறுப்பேற்படுத்துகின்றோம், மேலும் உமக்கு அடிபணிகின்றோம்; இறுதி விதியானது உம்வசமே உள்ளது.

[60:5] “எங்கள் இரட்சகரே, நம்பமறுப்பவர்களால் அடக்குமுறை செய்யப்பட்டவர்களாக இருக்க எங்களை விட்டுவிடாதீர், மேலும் எங்களை மன்னிப்பீராக. நீரே சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்”.

[60:6] கடவுள் மற்றும் இறுதி நாளைத் தேடுபவர்களுக்கு நல்லதொரு முன்னுதாரணம் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. திரும்பிச்சென்று விடுபவர்களைப் பொறுத்தவரை, (அவர்களிடம்) கடவுள் எந்தத் தேவையுமற்றவர், மிகவும் புகழுக்குரியவர்.

[60:7] உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள பகைமையைக் கடவுள் நேசமாக மாற்றி விடக் கூடும். கடவுள் சர்வ சக்தியுடையவர். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

குர்ஆன்: இறுதி ஏற்பாடு — ஸூரா 60