ஸூரா 70: உயரங்கள் — குர்ஆனின் ஓதுதல்கள் மற்றும் வாசிப்புகள்
YouTube · 3:39
ஸூரா 70: உயரங்கள்
[70:1] வினா எழுப்புகின்ற ஒருவர் தவிர்த்து விட இயலாத அத்தண்டனையைப் பற்றி வினவக் கூடும்.
[70:2] நம்பமறுப்பவர்களுக்கு, அதனைத் தடுத்து விடக் கூடியவர் எவருமில்லை.
[70:3] கடவுள்-இடமிருந்து; மிகவும் உயர்வான உயரத்தையுடையவர்.
[70:4] வானவர்கள், தங்களுடைய அறிக்கை களுடன், ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமானதொரு நாளில் அவரிடம் மேலேறு கின்றனர்.
[70:5] ஆகையால், அழகியதொரு பொறுமையை நீர் மேற்கொள்ள வேண்டும்.
[70:6] ஏனெனில் அவர்கள் அதனை மிகத் தொலை வாகக் காண்கின்றனர்.
[70:7] அதே சமயம் நாமோ அதனை மிக அருகில் காண்கின்றோம்.
