குர்ஆன் 10:13 — ஜோனா
உங்களுக்கு முன்னிருந்த பல தலைமுறையினரை அவர்கள் வரம்பு மீறியபோது நாம் அழித்திருக் கின்றோம். அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள் நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டனர். குற்றவாளிகளான மக்களுக்கு இவ்விதமாகவே நாம் கூலி கொடுக்கின்றோம்.
[10:12] துன்பம் மனிதனைத் தீண்டும் போது, அவன் படுத்த வண்ணமோ, அமர்ந்த வண்ணமோ, நின்ற வண்ணமோ நம்மிடம் இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றான். ஆனால் நாம் அவனு டைய துன்பத்தை நிவர்த்தி செய்தவுடன், எந்தக் கஷ்டத்தையும் நிவர்த்தி செய்யும்படி நம்மிடம் ஒருபோதும் இறைஞ்சிப் பிரார்த்திக் காதவன் போல அவன் சென்று விடுகின்றான்! வரம்பு மீறுபவர்களின் செயல்கள், இவ்விதமாக அவர்களுடைய கண்களுக்கு அழகாக்கப்பட்டு விட்டன.
[10:14] அதன் பின்னர், நீங்கள் எப்படிச் செய்யப் போகின்றீர்கள் என்பதைக் காண்பதற்காக, அவர்களுக்குப் பின்னால், உங்களை நாம் இந்த பூமிக்கு வாரிசாக்கினோம்.