குர்ஆன் 10:14 — ஜோனா
அதன் பின்னர், நீங்கள் எப்படிச் செய்யப் போகின்றீர்கள் என்பதைக் காண்பதற்காக, அவர்களுக்குப் பின்னால், உங்களை நாம் இந்த பூமிக்கு வாரிசாக்கினோம்.
[10:13] உங்களுக்கு முன்னிருந்த பல தலைமுறையினரை அவர்கள் வரம்பு மீறியபோது நாம் அழித்திருக் கின்றோம். அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள் நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டனர். குற்றவாளிகளான மக்களுக்கு இவ்விதமாகவே நாம் கூலி கொடுக்கின்றோம்.
[10:15] நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடம் ஓதிக்காட்டப்படும்போது, நம்முடைய சந்திப்பை எதிர்பார்க்காதிருப்பவர்கள், “இது அல்லாத ஒரு *குர்ஆனைக் கொண்டு வாரும், அல்லது இதனை மாற்றி விடும்!” என்று கூறுகின்றார்கள். “நானே சுயமாக இதனை மாற்றிவிட எனக்குச் சாத்திய மில்லை. எனக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். என் இரட்ச கருக்கு நான் கீழ்ப்படியாவிட்டால், அச்சமூட்டும் ஒரு நாளின் தண்டனைக்கு நான் அஞ்சுகின்றேன்” என்று கூறுவீராக.