குர்ஆன் 10:15 — ஜோனா
நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடம் ஓதிக்காட்டப்படும்போது, நம்முடைய சந்திப்பை எதிர்பார்க்காதிருப்பவர்கள், “இது அல்லாத ஒரு *குர்ஆனைக் கொண்டு வாரும், அல்லது இதனை மாற்றி விடும்!” என்று கூறுகின்றார்கள். “நானே சுயமாக இதனை மாற்றிவிட எனக்குச் சாத்திய மில்லை. எனக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். என் இரட்ச கருக்கு நான் கீழ்ப்படியாவிட்டால், அச்சமூட்டும் ஒரு நாளின் தண்டனைக்கு நான் அஞ்சுகின்றேன்” என்று கூறுவீராக.
[10:14] அதன் பின்னர், நீங்கள் எப்படிச் செய்யப் போகின்றீர்கள் என்பதைக் காண்பதற்காக, அவர்களுக்குப் பின்னால், உங்களை நாம் இந்த பூமிக்கு வாரிசாக்கினோம்.
[10:16] “கடவுள் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக்காட்டியிருக்க மாட்டேன், அன்றியும், இது குறித்து எதனையும் நீங்கள் அறிந்திருக்கவும் மாட்டீர்கள். இதற்கு முன்னர், ஒரு முழுமையான வாழ்வை உங்கள் மத்தியில் நான் வாழ்ந்திருக்கின்றேன் (மேலும் நீங்கள் என்னை புத்தியுள்ள, உண்மையான ஒரு மனிதனாக அறிந்திருக்கின்றீர்கள்). நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?” என்று கூறுவீ ராக.