Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:3 — ஜோனா

உங்களுடைய ஒரே இரட்சகர் கடவுள் தான்; வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்துப், பின்னர் அனைத்து அதிகாரங் களையும் ஏற்றுக் கொண்டவர். அவர் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்துகின்றார். அவருடைய நாட்டத்திற்கு இணங்கவே அன்றி, பரிந்துரைப்பவர் எவரும் இல்லை. உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர். அவரையே நீங்கள் வழிபடவேண்டும். நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டீர்களா?

[10:2] அவர்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நாம் உள்ளுணர்வளித்தது, மனிதர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளதா? அவர் “நீர் மக்களை எச்சரிக்க வேண்டும், மேலும் நம்பிக்கை கொண்டோருக்கு, அவர்கள் உயர்மதிப்பு மிக்கதோர் பதவியை தங்கள் இரட்சகரிடம் அடைந்து விட்டனர் என்ற நற்செய்தியை வழங்குவீராக”. (இவ்வாறு கூறும்படி உள்ளுணர்வளிக்கப்பட்டார்). நம்ப மறுப்போர், “இவர் ஒரு சாமர்த்தியமான மந்திரவாதி!” என்று கூறினார்கள்.

[10:4] அவரிடமே உங்களுடைய, உங்கள் அனை வருடைய இறுதித் திரும்புதல் இருக்கின்றது. இது கடவுள்-ன் சத்தியமான வாக்குறுதி யாகும். நம்பிக்கை கொண்டு நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோருக்கு, நீதமாக வெகு மதியளிப்பதற்காக, அவர் படைப்பைத் துவங்கு கின்றார், பின்னர் அதனை மீண்டும் செய்கின்றார். நம்ப மறுப்போரைப் பொறுத்த வரை, அவர்கள் அவர்களுடைய நம்ப மறுப்பின் காரணமாக நரகின் பானங்களுக்கும், வலி மிகுந்ததொரு தண்டனைக்கும் உள்ளா கின்றார்கள்.