குர்ஆன் 10:4 — ஜோனா
إِلَيهِ مَرجِعُكُم جَميعًا ۖ وَعدَ اللَّهِ حَقًّا ۚ إِنَّهُ يَبدَؤُا۟ الخَلقَ ثُمَّ يُعيدُهُ لِيَجزِىَ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالقِسطِ ۚ وَالَّذينَ كَفَروا لَهُم شَرابٌ مِن حَميمٍ وَعَذابٌ أَليمٌ بِما كانوا يَكفُرونَ
அவரிடமே உங்களுடைய, உங்கள் அனை வருடைய இறுதித் திரும்புதல் இருக்கின்றது. இது கடவுள்-ன் சத்தியமான வாக்குறுதி யாகும். நம்பிக்கை கொண்டு நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோருக்கு, நீதமாக வெகு மதியளிப்பதற்காக, அவர் படைப்பைத் துவங்கு கின்றார், பின்னர் அதனை மீண்டும் செய்கின்றார். நம்ப மறுப்போரைப் பொறுத்த வரை, அவர்கள் அவர்களுடைய நம்ப மறுப்பின் காரணமாக நரகின் பானங்களுக்கும், வலி மிகுந்ததொரு தண்டனைக்கும் உள்ளா கின்றார்கள்.
[10:3] உங்களுடைய ஒரே இரட்சகர் கடவுள் தான்; வானங்கள் மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்துப், பின்னர் அனைத்து அதிகாரங் களையும் ஏற்றுக் கொண்டவர். அவர் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்துகின்றார். அவருடைய நாட்டத்திற்கு இணங்கவே அன்றி, பரிந்துரைப்பவர் எவரும் இல்லை. உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர். அவரையே நீங்கள் வழிபடவேண்டும். நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டீர்களா?
[10:5] அவர்தான் சூரியனை ஒளிரக்கூடியதாகவும், சந்திரனை ஒரு விளக்காகவும் ஆக்கியவர், மேலும் வருடங்களை எண்ணும் முறையை நீங்கள் அறிந்து கொள்ளவும், மேலும் கணக் கிடவும் அதன் நிலைகளை அவர் வடிவமைத்தார். கடவுள் இவை அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே அன்றிப் படைக்கவில்லை. அறிந்து கொள்ளும் மக்களுக்கு, இந்த வெளிப்பாடுகளை அவர் விவரிக்கின்றார்.