குர்ஆன் 10:32 — ஜோனா
இவ்விதமானவர் கடவுள், உங்களுடைய உரிமையுள்ள இரட்சகர். சத்தியத்திற்கு அப்பால், பொய்மைகளைத் தவிர வேறென்ன இருக்கின்றது? இவை அனைத்தையும் நீங்கள் எப்படி அலட்சியப்படுத்த இயலும்?
[10:31] “வானம் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு வழங்குபவர் யார்? செவிப்புலன் மற்றும் பார்வைப் புலன் அனைத்தையும் கட்டுப்படுத்து பவர் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ள வற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்த வற்றையும் வெளிக்கொண்டு வருபவர் யார்? அனைத்து விஷயங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் யார்?”என்று கூறுவீராக. அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். “பின்னர் நீங்கள் ஏன் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்லை?” என்று கூறுவீராக.
[10:33] தீயவர்களாக இருப்பதைத் தேர்ந்தெடுத்து விட்டவர்களுக்கு உமது இரட்சகரின் முடிவால் ஏற்படுவது இதுதான்: அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.