Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:36 — ஜோனா

அவர்களில் பெரும்பாலோர் யூகத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை, மேலும் யூகமானது சத்தியத்திற்கு எவ்வகையிலும் மாற்று அல்ல. அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

[10:35] “உங்களுடைய இணைத் தெய்வங்கள் எவை யேனும் சத்தியத்தின் பால் வழிநடத்துகின்றன வா?” என்று கூறுவீராக. “கடவுள் தான் சத்தியத்தின் பால் வழிநடத்துகின்றார். “பின்பற்றத் தகுதியுடையவர் சத்தியத்தின் பால் வழிநடத்தும் ஒருவரா அல்லது வழிகாட்டாத, மேலும் தனக்கே வழிகாட்டல் தேவைப்படக் கூடிய ஒருவரா? உங்களுடைய தீர்ப்பில் என்ன கோளாறு?” என்று கூறுவீராக.

[10:37] கடவுள்-ஐ அன்றி மற்றவரால் இந்தக் குர்ஆன் இயற்றப்பட்டிருக்கச் சாத்தியமில்லை. இது முந்திய எல்லாத் தூதுச் செய்திகளையும் உறுதிப் படுத்துகின்றது, மேலும் ஒரு முற்றிலும் விவரிக்கப் பட்ட வேதமாகத் திகழ்கின்றது. இது சந்தேகத் திற்கு அப்பாற்பட்டது; ஏனெனில் இது பிரபஞ்சத் தின் இரட்சகரிடமிருந்து வந்துள்ளது.