குர்ஆன் 10:35 — ஜோனா
“உங்களுடைய இணைத் தெய்வங்கள் எவை யேனும் சத்தியத்தின் பால் வழிநடத்துகின்றன வா?” என்று கூறுவீராக. “கடவுள் தான் சத்தியத்தின் பால் வழிநடத்துகின்றார். “பின்பற்றத் தகுதியுடையவர் சத்தியத்தின் பால் வழிநடத்தும் ஒருவரா அல்லது வழிகாட்டாத, மேலும் தனக்கே வழிகாட்டல் தேவைப்படக் கூடிய ஒருவரா? உங்களுடைய தீர்ப்பில் என்ன கோளாறு?” என்று கூறுவீராக.
[10:34] “உங்களுடைய இணைத் தெய்வங்களில் எவையேனும் படைப்பைத் துவக்கி, பின்னர் அதனை மீண்டும் செய்ய முடியுமா?” என்று கூறுவீராக. “கடவுள் படைப்பைத் துவங்கு கின்றார், பின்னர் அதனை மீண்டும் செய் கின்றார்,” என்று கூறுவீராக.
[10:36] அவர்களில் பெரும்பாலோர் யூகத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை, மேலும் யூகமானது சத்தியத்திற்கு எவ்வகையிலும் மாற்று அல்ல. அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.