Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:38 — ஜோனா

“அவர் இதனை இட்டுக்கட்டிக் கொண்டார்” என்று அவர்கள் கூறினால், “நீங்கள் உண்மையாளர் களாக இருந்தால், பின்னர் இவற்றைப் போன்ற ஒரு சூராவைக் கொண்டு வாருங்கள், மேலும் கடவுள்-ஐத் தவிர, நீங்கள் விரும்பியவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறுவீராக.

[10:37] கடவுள்-ஐ அன்றி மற்றவரால் இந்தக் குர்ஆன் இயற்றப்பட்டிருக்கச் சாத்தியமில்லை. இது முந்திய எல்லாத் தூதுச் செய்திகளையும் உறுதிப் படுத்துகின்றது, மேலும் ஒரு முற்றிலும் விவரிக்கப் பட்ட வேதமாகத் திகழ்கின்றது. இது சந்தேகத் திற்கு அப்பாற்பட்டது; ஏனெனில் இது பிரபஞ்சத் தின் இரட்சகரிடமிருந்து வந்துள்ளது.

[10:39] உண்மையில், அவர்கள் இதனை ஆய்வு செய்தும், பரிசீலித்தும் பார்க்காமல், மேலும் இதனைப் புரிந்து கொள்வற்கும் முன்னர், இதனை ஏற்க மறுத்து விட்டனர். அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இவ்விதமாகவே நம்ப மறுத்தனர். ஆகையால், வரம்பு மீறியவர்களுக்கான விளைவுகளைக் கவனித்துப் பார்ப்பீராக.