குர்ஆன் 10:39 — ஜோனா
உண்மையில், அவர்கள் இதனை ஆய்வு செய்தும், பரிசீலித்தும் பார்க்காமல், மேலும் இதனைப் புரிந்து கொள்வற்கும் முன்னர், இதனை ஏற்க மறுத்து விட்டனர். அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இவ்விதமாகவே நம்ப மறுத்தனர். ஆகையால், வரம்பு மீறியவர்களுக்கான விளைவுகளைக் கவனித்துப் பார்ப்பீராக.
[10:38] “அவர் இதனை இட்டுக்கட்டிக் கொண்டார்” என்று அவர்கள் கூறினால், “நீங்கள் உண்மையாளர் களாக இருந்தால், பின்னர் இவற்றைப் போன்ற ஒரு சூராவைக் கொண்டு வாருங்கள், மேலும் கடவுள்-ஐத் தவிர, நீங்கள் விரும்பியவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறுவீராக.
[10:40] அவர்களில் சிலர் (இந்த வேதத்தில்) நம்பிக்கை கொள்கின்றனர், அதே சமயம் மற்றவர்கள் இதில் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றனர். உமது இரட்சகர் பாவம் செய்பவர்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார்.