Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:41 — ஜோனா

அவர்கள் உம்மை ஏற்க மறுத்தால், பின்னர், “என் செயல்கள் எனக்குரியது, உங்கள் செயல்கள் உங்களுக்குரியது. நான் செய்யும் எந்த ஒன்றிற் காகவும் நீங்கள் குற்றமற்றவர்கள் ஆவீர்கள், மேலும் நீங்கள் செய்யும் எந்த ஒன்றிற்கும் நான் குற்றமற்றவன் ஆவேன் ” என்று கூறுவீராக.

[10:40] அவர்களில் சிலர் (இந்த வேதத்தில்) நம்பிக்கை கொள்கின்றனர், அதே சமயம் மற்றவர்கள் இதில் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றனர். உமது இரட்சகர் பாவம் செய்பவர்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

[10:42] அவர்களில் சிலர் உம்மைக் கவனித்துக் கேட்கின் றனர், ஆனால் அவர்களால் புரிந்து கொள்ளவே முடியாத போது, செவிடர்களைக் கேட்கும்படிச் செய்ய உம்மால் இயலுமா?