குர்ஆன் 10:50 — ஜோனா
கூறுவீராக, “அவருடைய தண்டனை இரவிலோ அல்லது பகலிலோ எதில் உங்களிடம் வருவதானாலும், வரம்பு மீறுபவர்கள் ஏன் இப்படி அவசரப் படுகின்றனர்?
[10:49] “எனக்கே தீங்கிழைத்துக் கொள்ளவோ, அல்லது எனக்கே நன்மை செய்து கொள்ளவோ நான் எந்தச் சக்தியும் பெற்றிருக்கவில்லை; கடவுள் நாடுகின்றது மட்டுமே நிகழும்” என்று கூறுவீராக. ஒவ்வொரு சமூகத்திற்கும் முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு வாழ்க்கைக் கால அளவு உள்ளது. அவர்களுடைய தவணை முடிவிற்கு வந்து விட்டால், அவர்களால் அதனை ஒரு மணி நேரம் தாமதப்படுத்தவோ, அன்றி முற்படுத்தவோ இயலாது.
[10:51] “அது நிகழ்ந்து விட்டால், அப்போது நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களா? அப்போது ஏன் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்? அது வரட்டும் என்று நீங்கள் சவால் விட்டுக் கொண்டி ருந்தீர்களே?”